Friday, 18 December 2009

கானாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது...


கானா நாட்டில் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன......
அருன ஜானக முத்துகமகே என்ற இலங்கை வர்த்தகரே இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறைந்த விலையில் தங்கம் வழங்குவதாக தெரிவித்து சிலரிடம் மோசடியான முறையில் பெருந்தொகைப் பணத்தை குறித்த இலங்கை வர்த்தகர் பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த இலங்கை வர்த்தகர் சுமார் 80000 அமெரிக்க டொலர்கள் வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், தாம் இந்தக் குற்றச் செயல்களை மேற்கொள்ளவில்லை என குறித்த இலங்கை வர்த்தகர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 20000 அமெரிக்க டொலர் ரொக்கப் பிணை அடிப்படையில் குறித்த நபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இந்த மோச நடவடிக்கை குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஒரு கிலோ தங்கத்தை 12000 டொலர்களுக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்து நபர்களிடம் பணம் திரட்டப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு http://www.globaltamilnews.net/

No comments:

Post a Comment