இஸ்ரேலில் பிரச்னைகளுடன் வந்த 21 பெண்களை மயக்கி, கற்பழித்த மதபோதகர் ராட்சன் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் வசித்து வந்தவர் ராட்சன்(60). மதபோதகரான இவர் கடவுள் பற்றி அவ்வப்போது பிரசங்கம் செய்து வந்தார். பிரச்னைகளுடன் வருவோருக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும் என அறிவிப்பு செய்தார். இவரை நம்பி வந்தவர்களுக்காக, தனது ஸ்டைலில் ஆடிப்பாடி பிரார்த்தனை செய்வார். சிலருக்கு தானாக தீர்ந்த பிரச்னைகளை கூட, தன்னால் தான் தீர்க்கப்பட்டது, எனக் கூறிகொண்டார்.இது பலரை நம்ப வைத்தது. குறிப்பாக, பெண்கள் அதிகளவில் தேடி வந்தனர். அதில், தனக்கு பிடித்தமான பெண்களிடம் மட்டும் அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதாக அதிக ஆர்வம் காட்டினார். அவர்களுடன் அடிக்கடி தனிமையில் இருந்தார்.
http://gtbc.fm/morenews.php?id=588
No comments:
Post a Comment