அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்துக்கு தீவிரவாத சதிச் செயல் காரணம் அல்ல என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நியூயார்க் நகரில் கனெக்டிகட் எனுமிடத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் "கிளீன் எனர்ஜி" " எனும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மின்நிலையத்தில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 11.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நிகழ்ந்த போது குண்டு வெடித்ததைப் போல சத்தம் கேட்டதாம். ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு சத்தம் கேட்டதால் அப்பகுதி அருகே குடியிருந்தவர்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.
ஆனால் இது தொழிற்சாலை விபத்து, இது சதிச் செயல் அல்ல என்று மிடில்டவுன் மேயர் செபாஸ்டின் என் ஜூலியானோ தெரிவித்தார். இந்த விபத்து நிகழ்ந்தபோது ஆலையில் எத்தனை பேர் பணியில் இருந்தனர் என்பதுதெரியவில்லை. இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. காயமடைந்தவர்கள் 12 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மிகப் பெரிய தீக் கோளம் பலத்த ஓசையுடனும், அதிக புகையுடனும் வெளிக் கிளம்பியதைப் பார்த்ததாக அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர். தொழிற்சாலைக்கு அருகிலிருந்த வீடுகளின் ஜன்னல்கள் நொறுங்கி விழுந்தன. குழாய் மூலம் எரிவாயுவை அனுப்பும்போது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment