Thursday, 11 February 2010

சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – அமெரிக்கா, நோர்வே

ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு அமெரிக்காவும், நோர்வேயும் நிதி உதவி வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்தை அந்த இரண்டு நாடுகளும் மறுத்துள்ளன.




இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஷபக்ஷவை மேற்கோள்காட்டி சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தகவல்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக நோர்வே தூதரகம் அறிவித்துள்ளது.



ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் நோர்வே இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.



எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களிலும் நோர்வே தலையீடு செய்ததில்லை எனவும், செய்யப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த விவகாரம் தொடர்பில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோரி ஹாட்ரோம், இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இதேவேளை, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு பண உதவி அளித்ததாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்டுள்ள கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதென அமெரிக்கா ஊட அறிக்கை ஒன்றின் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளது.



இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



எந்தவொரு வேட்பாளருக்கும் தாங்கள் ஆதரவளிக்கவில்லை எனவும், இலங்கையில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தமது நாட்டின் விருப்பமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்த நபர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா மேலும் கோரிக்கை விடுத்துள்ளது

No comments:

Post a Comment