எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆளும் கட்சி அழைபப்பு விடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்ததன் மூலம் மேற்கொண்ட தவறுகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் இருப்பதாக> சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா> தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அறிவித்துள்ளார்.
அவசர காலச் சட்ட நீடிப்பு தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உங்களது மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமாயின் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment