சிறுபான்மை மக்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என ஃலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நிலைமை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டியதொன்றென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் தேர்தல் தொகுதிகளில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் பெரும்பான்மை மக்கள் செறிந்த வாழும் தேர்தல் தொகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனிக்க வேண்டும் எனவும சிறுபான்மை மக்கள் ஏன் எதிராக வாக்காளித்தார்கள் என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் திட்டமிடப்பட்ட முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளது.
தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment