அரந்தலாவ பிக்குவை கொலை செய்து, தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய கருணா மற்றும் பிள்ளையானுக்கு அரசாங்கம் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொடுத்தது போல் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேக்காவை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுக்குமாறு மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளனர். அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர, ராமஞ்ய ஆகிய பௌத்த பீடங்களை சேர்ந்த மாநாயக்கர்கள் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்திரத்தை ஆத்திரத்தால் தீர்க்க முடியாது என புத்த பகவான் போதித்துள்ளதை பின்பற்றி, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுடன் காணப்படும் கோபதாபங்களை கைவிடுங்கள்.
No comments:
Post a Comment