Thursday, 4 February 2010

ஆஸ்கர் விருது : சிறந்த திரைப்படத்துக்கான பரிந்துரை பட்டியலில் அவதார்

ஆஸ்கர் விருதுக்கு (2010) பரிந்துரை செய்யப்பட்டுள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படத்துக்கான பரிந்துரை பட்டியலில் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வரும் ‘அவதார்’ உட்பட 10 படங்கள் இடம் பெற்றுள்ளன. வழக்கமாக இந்த விருதுக்கு 5 படங்கள் மட்டுமே பரிந்துரை பட்டியலில் இடம் பெறும். ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக 10 படங்கள் போட்டியிடுகின்றன.
‘அவதார்’ மற்றும் ‘தி ஹர்ட் லாக்கர்’ திரைப்படங்கள் தலா 9 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ‘கபுள்ஸ் ரிட்ரீட்’ படத்தில் இடம் பெற்ற ‘நா நா’ என்ற பாடலுக்காக, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்வு செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment