Monday, 30 August 2010

சொந்த காணிகளுக்குள் நுழைந்த மக்கள் தடுக்கப்பட்டனர் கிளிநொச்சி பொன்னகரில் பதற்றம் ‐ கிளிநொச்சியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் பார்த்தீபன்‐படங்கள் இணைப்பு‐




பொன்னகர் மக்கள் குடியிருப்பதற்காக இன்று மாலை தங்கள் காணிகளுக்குள் நுழைந்த பொழுது தடுத்து வெளியில் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. கடந்த சில மாதங்களாக காணிகளுக்குச் செல்ல விடாமல் இந்த மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.


 காணிகள் வடக்கு மாகாண சபைக்கு சுவீகரிக்கப்படுகின்றன என்று கூறப்பட்டு தடுக்கப்பட்ட மக்கள் பொன்னகரிலும் கிளிநொச்சி  மத்திய கல்லூரியிலும் தங்கியிருந்தனர். குறித்த மக்கள், இனியும் காத்திருக்க முடியாது என்றபடி இன்று தமது காணிகளுக்குள் சென்று குடியேறப்போகிறோம் என காணிகளுக்குள் நுழைந்தனர். 


காணிகளை துப்புரவு செய்து கொண்டிருந்த வேளை அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட காவலாளிகள் படைத்தரப்புக்கு அறிவித்ததைத் தொடர்ந்து மக்கள் காணிகளிலிருந்து பலவந்தமாக 
வெளியேற்றப்பட்டார்கள்.





தமது சொந்தக் காணிகளில் தம்மை குடியிருத்துமாறு அரச அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்த பொழுதும் தமது அவலம் குறித்து யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் தம்மை குடியமர்த்தும்படி வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனல் சந்திரசிறியிடமும் மனு கையளித்தாக தெரிவித்தார்கள். மேலும்

No comments:

Post a Comment