ஆர்யாவும், நயன்தாராவும் நடித்திருக்கும் படம் ‘பாஸ்(எ)பாஸ்கரன். ‘சிவா மனசுல சக்தி’ படத்தை இயக்கிய ராஜேஷ், இப்படத்தை இயக்கியுள்ளார். அழுக்கான ஆடைகளுடன், இறுக்கமான கதாபாத்திரங்களில் நடித்த ஆர்யாவை இப்படத்தில் ஜாலியான பேர்வழியாக காட்டியிருக்கிறார் ராஜேஷ். ஆர்யா சந்தானத்துடன் சேர்ந்து செய்யும் லூட்டியே இப்படத்திற்கு பியூட்டியாக அமைந்துள்ளது. அதை விட ஒரு பியூட்டி இப்படத்தின் தயாரிப்பாளர் சீனிவாசனிடம் இருந்து, படத்தை வெளியிடும் உரிமையை பெற்ற ஆர்யா, உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ரிலிஸ் செய்கிறார் என்பதுதான்.
யுவன்சங்கர் ராஜாவின் இசையமைக்கும் இந்த படத்தைன் அனைத்து பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா 2010, ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. பாடல்கள் குறுந்தகடை சூர்யா வெளியிட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பெற்றுக்கொண்டார். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்க, நயன்தாராவும், யுவனும் கலந்துகொள்ளவில்லை. “யுவனுக்கு மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை, அவர் எவ்வளவோ முயற்சித்தும் இந்த விழாவில் அவரால் பங்கேற்க முடியவில்லை” என்று யுவன் வராததற்கு காரணம் சொன்ன ஆர்யா, “நயன்தாரா இந்த விழாவிற்கு வராதது அவரின் பாலிஸியால் தான். பாலிஸி என்றவுடன் ஏதோ எல். ஐ.சி பாலிஸி என்று நினைத்து விடாதிர்கள், பாடல்கள் வெளியிட்டு விழாக்களிள் அவர் கலந்துகொள்வதில்லையாம்.இதை ஒரு பாலிஸியாகவே கடை பிடித்து வருகிறாராம். அதனால் தான் இங்கேயும் வரவில்லை” என்று நயன்தாரா வராததற்கு உண்டான காரணத்தை கூறினார். அப்படியே தனது முகத்தில் சிறிது வருத்தத்தையும் காட்டினார்.

No comments:
Post a Comment