விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்திற்கு தனது எதிரணியினரான கஸ்ரோ குழுவினரே காரணம் என கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கூறிய போதிலும் கே.பின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தாக இராணுவத்தின் உயர் மட்டத்தரப்பு தகவல்களை மேற்கோள் காட்டி சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் உயிரிழந்து விட்டதாகவும் இதனால் யுத்தம் முடிவடைந்து விட்டது என 2009 ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இராணுவத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தனர்.
மே 16 ஆம் திகதி அதிகாலை இராணுவ பாதுகாப்பு அரண்களை உடைத்துக்கொண்டு செல்லும் நோக்கில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது, தீபற்றி எரிந்த அம்புலன்ஸ் வண்டியில் இருந்த சடலம் பிரபாகரனுடையது என படையினர் எண்ணியதே படையினர் யுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவித்ததற்கு காரணமாகும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை நிராகரித்த கே.பி 17 ஆம் திகதி பிரபாகரன் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட புலனாய்வுத்துறையினர் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட செய்மதி தொலைபேசி உரையாடல் குறித்து விசாரணை நடத்தியதுடன் பிரபாகரனின் தொலைபேசி இருந்த இடத்தை கண்டறிந்தனர். மேலும்.
No comments:
Post a Comment