Saturday, 19 December 2009

முகாமில் தங்கியிருக்கும் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு கொத்தணி வாக்குச் சாவடிகளை அமைக்கப்படும் ‐ தேர்தல் ஆணையாளர்

இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருக்கும் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக கொத்தணி வாக்குச் சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தீர்மானித்துள்ளார். இந்த வாக்காளர்களை கொத்தணி வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துவர இலவசப் போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியிருக்கும் வவுனியா, மட்டக்களப்பு பிரதேசங்களில் தேர்தல் அதிகாரிகள் குழுவொன்று சென்றிருந்ததுடன் அவர்கள் தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18638&cat=1

No comments:

Post a Comment