Saturday, 19 December 2009

சரத் பொன்சேகா தனது சொத்துவிபரங்களை தனது சொத்து விபரங்களை தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளார்

ஒரு வங்கிக் கணக்கு வீட்டுடன் கூடிய காணி, இரண்டு வெற்றிக் காணிகள், ஒரு பென்ஸ் கார், இவற்றைத் தவிர தன்னிடம் எவ்விதச் சொத்துக்களும் இல்லையென ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேக்கா சமர்ப்பித்துள்ள சொத்து விபர அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், நான்கு வங்கிக் கணக்குகள் 16 லட்சத்து 92 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் தனது மனைவியிடம் இருப்பதாகவும் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேக்கா தனது சொத்து விபரங்கள் அடங்கிய அறிக்கையை நேற்று முன்தினம் வேட்பு மனுவுடன் இணைத்து தேர்தல் ஆணையாளரிடம் கையளித்திருந்தார்.

மேலதிக தகவல்களுக்கு - http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=18640&cat=1

No comments:

Post a Comment