Monday, 21 December 2009

இடம் பெயர் மக்களை மீள் குடியேற்றும் திட்டத்திற்கு உலக வங்கி உதவிகளை வழங்கத் தீர்மானம்

இடம்பெயர் மக்களை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக உலக வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்வரும் காலங்களில் நிதி உதவிகளை வழங்கவுள்ளது. மீள் குடியேற்றம், மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கின் கரையோரப் பகுதிகளில் மீள் குடியேற்றத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி கடனாக வழங்கவுள்ளது.

No comments:

Post a Comment