கிரிக்கெட் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது. வரும் 2020ல் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் "டுவென்டி-20" " போட்டி இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில், கிரிக்கெட் இடம் பெறாதது, பெரும் குறையாக இருந்தது. இதனை சேர்க்கும்படி பல முறை வலியுறுத்தப்பட்டது. கடந்த 2007ல் ஒலிம்பிக் விளையாட்டுக்கான அந்தஸ்து கிரிக்கெட்டுக்கு வழங்கப்பட்டது. ஆனாலும், போட்டி அட்டவணையில் சேர்க்கப்படவில்லை.
இந்தச் சூழலில், கனடாவின் வான்கூவர் நகரில் நேற்று நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்(ஐ.ஒ.சி.,) கூட்டத்தில், கிரிக்கெட் பற்றி விவாதிக்கப்பட்டது. பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு(ஐ.சி.சி.,) அங்கீகாரம் அளித்து, உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். இதை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ஐ.ஒ.சி., தகவல் தொடர்பு இயக்குனர் மார்க் ஆடம்ஸ் கூறுகையில்,""ஐ.சி.சி., க்கு அதிõரப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளோம். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் தகுதியை கிரிக்கெட் பெறுகிறது. நவீன மலையேற்றம், மோட்டார் படகு ரேஸ் போட்டிகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது," "" "என்றார்
http://gtbc.fm/sports_more.php?id=564
No comments:
Post a Comment