Monday, 15 February 2010

தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள்

இந்தியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கைவிரலில் காயம் அடைந்தபோதும், களம் இறங்கிய கிரேம் ஸ்மித் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஜாகீர் பந்துவீச்சில் "கிளீன் போல்டு" " ஆனார். மற்றொரு தொடக்க வீரரும், புதுமுக வீரருமான அல்விரோ பீட்டர்சனும், நாகபுரி டெஸ்டில் இரட்டைச் சதம் அடித்த ஹஷிம் ஆம்லாவும் இணைந்து அபாரமாக விளையாடினர். இருவரும் இணைந்து 20 ஓவர்களில் 100 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னரும் சிறப்பாக விளையாடிய இருவரும் இணைந்து 304 பந்துகளில் 209 ரன்கள் விளாசினர்.

http://gtbc.fm/sports_more.php?id=584

No comments:

Post a Comment