Monday, 15 February 2010

இந்திரா கொலையாளிகள் 3 பேருக்கு நியூஸிலாந்து சீக்கிய கோயிலில் மரியாதை

இந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து 25 ஆண்டுகளை கடந்து விட்டாலும் அவரை கொன்ற கொலையாளிகளுக்கு நியூஸிலாந்து சீக்கிய கோயிலில் கவுரவம் வழங்கப்படுவது இங்கு வாழும் ஏனைய இந்தியர்களின் மனதை புண்படுத்தியுள்ளது.இது தொடர்பான விஷயத்தை வீக்எண்ட் ஹெரால்டு என்ற பிரபல பத்திரிகை இந்த பிரசுரம் செய்துள்ளது.

இந்தியாவின் பிரதமராக இருந்து வந்த இந்திரா 1984 ம் ஆண்டில் அவரது பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலம்மிக்க தைரியம் மிகுந்த துணிச்சல்காரர் என பெயர் எடுத்த இந்திராவின் இழப்பு இந்திய அரசியலில், காங்கிரசில் பெரும் வெற்றிடமாக கருதப்பட்டது.
இந்திரா கொலையுண்ட தருணத்தில் சத்வந்த்சிங், பீந்த்சிங், கேஹர் சிங் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே மற்ற பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டனர். கேஹர்சிங் மரணத்தண்டனை பெற்றார். இந்த சம்பவம் நடந்து 24 ஆண்டுகளை கடந்து விட்டது.கொலையாளிகள் சீக்கியர்கள் என்பதால் இவரது கொலையை தொடர்ந்து டில்லி, பஞ்சாபில் பெரும் கலவரம் வெடித்தது. பல சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment