Monday, 15 February 2010

எங்கு சென்றாலும் மிக கவனமாக இருங்கள் : அமெரிக்கர்களுக்கு ஒபாமா அரசு எச்சரிக்கை

:"அமெரிக்க நாட்டவர்களுக்கு உலக அளவில் அச்சுறுத்தல் உள்ளதால், குறிப்பாக அல்-குவைதா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்பதால், உஷாராக இருக்க வேண்டும்" " என, தங்கள் நாட்டவர்களுக்கு அதிபர் ஒபாமா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
அமெரிக்கா, தன் குடிமக்களுக்கு உலகளவிலான பயண எச்சரிக்கை விடுத்துள்ளது; குறிப்பாக, அல்-குவைதா இயக்கத்தினர் தற்கொலைப் படை தாக்குதல், கடத்தல் மற்றும் குண்டு வைத்தல் போன்ற சம்பவங்களை நிகழ்த்தலாம்" " என, அந்நாடு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:அமெரிக்க குடிமக்கள் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில், அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த, அல்-குவைதா பயங்கரவாத இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.தற்கொலைப் படை தாக்குதல், கடத்தல், படுகொலைகள் மற்றும் வெடிகுண்டுகள் வைத்தல் போன்ற செயல்கள் மூலம், அவர்கள் அமெரிக்கர்களுக்கு பிரச்னை உண்டாக்கலாம். இதற்கு அவர்கள் எந்த வகையான ஆயுதங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

http://gtbc.fm/morenews.php?id=572

No comments:

Post a Comment