Monday, 15 February 2010

பிரபுதேவா- நயன்தாரா ஓட்டம்!!

சென்னை விமான நிலையத்தில் கை கோர்த்தபடி ஜோடியாக வந்த பிரபுதேவா- நயன்தாரா இருவரும் பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.
நடிகை நயன்தாராவுக்கும், நடிகர் பிரபுதேவாவுக்கும் இடையிலான காதல் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாக இருந்து வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து மெளனம் சாதிப்பதன் மூலம் முடிந்தவரை மீடியாவின் பரபரப்பு வெளிச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்தக் காதலுக்கு, பிரபுதேவாவின் மனைவி ரமலத் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவை எங்கே பார்த்தாலும் அடிப்பேன் என்றார். ஆனால், அவருடைய கோபம் இப்போது அடங்கி விட்டது. அவரை, பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.
மனைவி ரமலத் சமாதானம் ஆனபிறகுதான் பிரபுதேவாவும், நயன்தாராவும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டார்களாம் (இருந்தாலும் நயன்தாராவை பிரபுதேவாவுடன் பார்த்த ஆத்திரத்தில் மீண்டும் உதைப்பேன் என்று சவுண்ட் விட்டார் ரம்லத்!).

http://gtbc.fm/cine_more.php?id=590

No comments:

Post a Comment