Monday, 15 February 2010

எதிர்கால வேளாண்மை

இருபது ஆண்டுகளுக்கு முன்பு மரவளர்ப்புடன் எரிசக்தியை மிச்சப்படுத்தும் விவசாயத்தை இணைத்துப் "பர்மாகல்ச்சர்" " என்ற ஒரு வேளாண் பண்பாட்டை உருவாக்கிய பில்மோலிசன் செய்த முன்னெச்சரிக்கை இன்று உண்மையாகிவிட்டது. அவர் செய்த முன்னெச்சரிக்கை இதுதான்.

"இன்னும் இருபது ஆண்டுகளில் அமெரிக்காவின் உதவித் திட்டங்களின் ஏமாற்று வேலைகள் வெட்ட வெளிச்சமாகும். இயற்கை விவசாயத்தின் மீது உண்மையான கவனம் திரும்பும். தொழில்மய விவசாயம் மெல்ல மெல்ல அழிந்துவிடும். பெருகிவரும் சாகுபடிச் செலவைச் சமாளிக்க முடியாது.

தொழில்மய விவசாயத்தில் இடுபொருள் செலவு பெட்ரோல், டீசல் போன்ற மீண்டும் புதுப்பிக்க முடியாத புதைவு எரிசக்தித் தேவையின் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. அதாவது என்.பி.கே. என்று சொல்லப்படும் ரசாயன உரங்கள், அழிந்துவரும் புதைவு எரிசக்திகளை வைத்து உற்பத்தியாவதால் பெட்ரோல் விலை உயர்ந்தால் உரவிலையும் உயர்ந்து பட்ஜெட்டின் பெரும்பகுதிச் செலவை உரமானியத்துக்கு மட்டுமே வழங்க வேண்டிவரும்.

http://gtbc.fm/article_more.php?id=579

No comments:

Post a Comment