சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் மீது வீட்டு எஜமான் பெண்ணின் உடலில் ஆணிகளை அடித்து அவரை இலங்கை திருப்பி அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் 24 ஆணிகள் காணப்படுவதாக மாத்தறை கம்புறுப்பிட்டிய வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தியாகொட பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய என்.பி ஆரியவதி என்ற பெண்மணியே இந்த சித்தரவதைக்கு உள்ளாகியுள்ளார்.
வீட்டில் உள்ளவர்களினால் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு அழுத்தம் கொடுத்தால், வீட்டின் உரிமையாளர் தனது உடலில் பல அளவிலான ஆணிகளை தனது உடலில் அடித்து தன்னை சித்திரவதை செய்து இலங்கைக்கு திருப்பிய அனுப்பியதாக ஆரியவதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெண்ணின் உடலில் இரண்டு அங்குலம் நீளமான ஆணிகளும், சட்டை பின் அளவிலான ஆணிகளும் காணப்பட்டுவதாக கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரபாத் கஜதீர தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. சில இடங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை சத்திர சிகிச்சை மூலமும் அகற்றுவது சிரமமானது என பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
சத்திர சிகிச்சை மூலம் அகற்றக்கூடிய அனைத்து ஆணிகளும் அகற்றப்பட்ட பின்னர் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து சத்திர சிகிச்சை மருத்துவர் கமல் வீரதுங்க தீர்மானிப்பார் எனவும் கஜதீர கூறியுள்ளார். மேலும்.
அடப்பாவி!
ReplyDelete