Friday, 27 August 2010

நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட காணிகளைப் பற்றி நாம் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை ‐ பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன்

நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட காணிகளைப் பற்றி நாம் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பின் மூலம் உங்களுக்கான எல்லா விதமான வசதிகளையும் ஏற்பாடு செய்து மழைக்காலத்திற்கு முன்னர் குடியமர்த்த வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அதற்கு ஏற்ற வகையில் உங்களுக்கு ஏற்ற பிரதேசங்களை நீங்களே பதிவு செய்து கொள்ளுங்கள் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

சம்பூர் கிழக்கு மற்றும் மேற்கு, நவரெட்ணபுரம், கடற்கரைச்சேனை, கூனித்தீவு உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களை மீளக்குடியமர்த்துவது சம்பந்தமாக கலந்துரையாடிய போதே பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு பேசிய அமைச்சர், எம்மிடமிருந்து பறிபோன காணிகள் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு முடிந்து விட்டது. அரசுக்கு நம்டைய காணிகளை எப்போதும் எடுத்துக்கொள்வதற்கு முடியும் அதற்கு சட்டம் இடம்கொடுக்கிறது. எனவே நமக்கான வளமான காணிகளை வேறு இடங்களில் இனங்காண்பது தான் இப்போதைக்கு சாத்தியமான விடயம். எனவே நமக்குரிய காணிகளை இனங்கண்டு விரைவில் அதற்கான வேலைகளில் நாம் ஈடுபட வேண்டும். அது உங்கள் கைகளில் தான் உள்ளது. மேலும்.

No comments:

Post a Comment