Tuesday, 14 September 2010

கொழும்பில் தனிநபர் ஒருவர் வித்தியாசமான முறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்




 
 
 
கொழும்பில் தனிநபர் ஒருவர் வித்தியாசமான முறையில் விகாரமகாதேவி பூங்கா பகுதியில் அமைந்துள்ள தூண் ஒன்றின் மீது ஏறி நின்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
 

40 அடி உயரமுடைய விளம்பரப்பதாகை ஒன்றின் உச்சியில் ஏறி நின்றே குறித்த நபர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக ஜீரிஎன் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
 

தனது பிரச்சினைக் குறித்து தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்வை சந்தித்து அவருடன் உரையாட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த குறித்த நபர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
எனினும் பொலிஸார் குறித்த நபரை கீழிறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அவர் தொடர்ந்தும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

No comments:

Post a Comment